வேடசந்தூர், மே 31: வடமதுரை அருகேயுள்ள பாப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் அழகம்மாள் (55). இவரது கணவர் பழனிச்சாமி கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்று விட்டார். அதன்பின்னர் அழகம்மாள் தனது மகள் தங்கமணி, வளர்ப்பு மகன் பாலா (37) ஆகியோருடன் வசித்து வந்தார். இந்நிநிலையில் பாலா தனது தங்கை தங்கமணிக்கு திருமணம் செய்து கொடுக்க முடியவில்லை என்ற மன வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாழ்வில் வெறுப்படைந்த பாலா வீட்டில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அழகம்மாள் புகாரில் வடமதுரை எஸ்ஐ வேலுமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்