நிலக்கோட்டை, செப்.4: செம்பட்டி அடுத்த, சித்தையன்கோட்டை அருகே சொக்கலிங்கபுரம் செல்லும் சாலையில், தனியாருக்கு சொந்தமான பிளாட்டில் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக, செம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அங்கு சென்ற போலீசார், வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அந்த நபர் சித்தையன்கோட்டை ஆசாரி தெருவை சேர்ந்த தச்சுத் தொழிலாளியான ராமச்சந்திரன் (36) என தெரிய வந்தது.