சாத்தான்குளம், ஜூன் 20: சாத்தான்குளம் அடுத்த பெரியதாழை முத்தம்மாள்புரத்தை சேர்ந்த குமார் மகன் செல்வசூர்யா (23). திசையன்விளையில் உள்ள கடையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடித்து வீட்டிற்கு அரசூர் பனைவிளை வழியாக பைக்கில் சென்றார். அப்போது பின்னால் ஒரே பைக்கில் வந்த மூவர், அதிசயபுரத்தில் அவரை வழிமறித்து பைக் சாவியை பறித்தனர். மேலும் வாளால் தாக்கி விட்டு சென்றுள்ளனர். சம்பவம் குறித்து செல்வசூர்யா நண்பர்களுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். மேலும் அருகிலுள்ள கிராம மக்களிடமும் தெரிவித்துள்ளார். உடனடியாக திரண்ட மக்கள், பைக்கில் சென்ற 3 பேரை தேடினர். அப்போது மற்றொரு சாலை வழியாக வெளியே வந்த அவர்களை மடக்கி பிடித்து தட்டார்மடம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள், நெல்லை மாவட்டம் உவரியை சேர்ந்த மதன் மகன் ஸ்டெபின் (22), நிக்சன் மகன் நித்திக் (18), ஆலங்குளம் ஆறுமுகராஜ் மகன் பாலசுதன் என்பது தெரிய வந்தது. மூவரையும் கைது செய்த போலீசார், இவர்களுக்கு உதவியதாக அதிசயபுரம் சுந்தர்ராஜ் மகன் பிரபு(22) என்பவரையும் கைது செய்தனர். தொடர்ந்து 4 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது.
வாலிபரை வாளால் தாக்கி கொல்ல முயற்சி
0
previous post