விருத்தாசலம், ஜூன் 14: விருத்தாசலம் ஆலடி சாலையை சேர்ந்தவர் முருகன் மகன் அஜித்(22). சம்பவத்தன்று இவர் அப்பகுதியில் நடந்த தனது நண்பர் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்காக நண்பர்கள் சிலரின் படத்தை போட்டு பேனர் வைத்துள்ளார். அதில் அதே பகுதியை சேர்ந்த விக்கி என்கிற விக்னேஸ்வரன், வெங்கடேசன், அனீஸ், மற்றும் ஆதி ஆகிய நான்கு பேரின் படங்களை போடாமல் பேனர் வைத்ததாக கூறி மேற்கண்ட நால்வரும் அஜீத்திடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து அஜித்தை அசிங்கமாக திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து அஜித், விருத்தாசலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் விக்கி உள்பட 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
58