உளுந்தூர்பேட்டை, ஜூன் 18: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நகர் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் (35), இவர் சம்பவத்தன்று ஒரு இருசக்கர வாகனத்தில் உளுந்தாண்டார்கோவில் அருகில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக மற்றொரு பைக்கில் வந்தவர்கள் இடிப்பது போல் சென்றுள்ளனர். இதுகுறித்து நாராயணன் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 10க்கும் மேற்பட்டவர்கள் நாராயணனை அசிங்கமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் நாராயணன் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் வழக்கு பதிவு செய்து தீனா உள்ளிட்ட இரண்டு பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றார்.
வாலிபரை தாக்கிய 2 பேர் கைது
0