அருமனை, ஆக. 20: அருமனையை அடுத்த மஞ்சாலுமூடு திடுமண்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் ஆஸ்பின் ரூபன் (20). மாற்றுத்திறனாளி. அதே பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (55). இவர் அடிக்கடி அப்பகுதியில் தகாத வார்த்தைகள் பேசி அடாவடி மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் திருட்டுத்தனமாக மது விற்பனையும் செய்து வந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் தகாத வார்த்தைககள் பேசி, தகராறில் ஈடுபட்ட கனகராஜை ஆஸ்பின் ரூபன் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் ஆஸ்பின் ரூபனை கத்தியால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்த புகாரின்பேரில் அருமனை போலீசார் கனகராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.