புதுச்சேரி, ஆக. 4: புதுச்சேரி ெரட்டியார்பாளையம் புதுநகர் பகுதியை சேர்ந்தவர் வீரமணி. இவர் பழக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் விநாயகமூர்த்தி (22). அவரது தந்தை கடையில் ேவலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 1ம் தேதி இரவு விநாயகமூர்த்தி வீட்டுக்கு வந்து ெகாண்டிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த ஜெய்குமார் மற்றும் உருளையன்பேட்டை பகுதியை சேர்ந்த எமில் ஆகியோர் விநாயகமூர்த்தியை பார்த்து தகாத வார்த்தையால் திட்டியுள்ளனர். உடனே விநாயகமூர்த்தி ஏன் திட்டுகிறீர்கள் என அவர்களிடம் கேட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த ஜெயக்குமார் மற்றும் எமில் சேர்ந்து, விநாயகமூர்த்தியை தகாத வார்த்தையால் திட்டி, கத்தியை எடுத்து வெட்டியுள்ளனர். இதில் விநாயகமூரத்தியின் அலறல் சத்தம் கேட்ட, அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர். இதையடுத்து பொதுமக்கள் விநாயகமூர்த்தியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.