சேலம், நவ. 15:சேலம் சூரமங்கலம் நரசோதிப்பட்டி பிள்ளையார் கோயில் வீதியை சேர்ந்தவர் சுரேஷ்(37). ஜேசிபி வண்டி வைத்துள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார்(36), கூலித்தொழில் செய்து வருகிறார். இருவரும் நெருங்கிய உறவினர்கள். நேற்று பகல், சுரேஷ் வீட்டிற்கு வந்து, அவரது தாயை ஆபாசமாக விஜயகுமார் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த சுரேஷ், அவரை எச்சரித்து அனுப்பி வைத்தார். சிறிது நேரம் கழித்து வந்த விஜயகுமார், தான் வைத்திருந்த கத்தியால் சுரேஷை குத்தினார். அவரது கையில் குத்து விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவரை, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், சூரமங்கலம் போலீசார், விஜயகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபருக்கு கத்திக்குத்து; கூலித்தொழிலாளி கைது
0
previous post