நிலக்கோட்டை, ஜூன் 4: கொடைரோடு அருகேயுள்ள தர்மாபுரி கிராமத்தில் இரட்டைமலையான், வெள்ளிமலையாச்சி சாமி கோவில் வைகாசி திருவிழா கடந்த 3 நாட்களாக நடந்தது. இதில் ஜூன் 1ம் தேதி விழாவின் போது ஆடல், பாடல் நிகழ்ச்சி நடந்தது. இதனை புதுரை சேர்ந்த நாகார்ஜூன் (27) தனது வாகனத்தில் அமர்ந்தபடி பார்த்ததாக கூறப்படுகிறது. நிகழ்ச்சிக்கு அவர் இடையூறு ஏற்படுத்துவதாக கருதி அப்பகுதியை சேர்ந்த சிலர், அவருடன் தகராறில் ஈடுபட்டனர். இதில் தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல், நாகார்ஜூனாவை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடியது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் ஜிஹெச்சில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிந்து தலைமறைவாக உள்ள 5 பேரை தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
வாலிபருக்கு அடி, உதை: 5 பேர் மீது வழக்கு
0
previous post