திருச்சி, ஜூலை 22: திருச்சியில் வாலிபரிடம் செல்போன் பறித்த நபர்களை போலீசார் தேடுகின்றனர். திருச்சி கம்பரசம்பேட்டை பெரியார் நகரை கீழத்தெருவை சேர்ந்தவர் பாலமுருகன்(18). இவர் கடந்த 19ம் தேதி இரவு சத்திரம் பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத 3 பேர், பாலமுருகனிடம் செல்போனை பறித்துக்கொண்டு தப்பினர். இது குறித்த புகாரின்பேரில், கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.