சேலம், நவ.16: சேலத்தில் வாலிபரிடம் கத்திமுனையில் பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 8 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சேலம் சித்தர் கோயில் பகுதியை சேர்ந்தவர் தீபன்ராஜ் (34). இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மூணாங்கரடு பகுதியில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 10பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த ₹6,150ஐ பறித்து சென்றது. இதுபற்றி அன்னதானப்பட்டி போலீசில் தீபன்ராஜ் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், தாதம்பட்டியை சேர்ந்த கவுதம் (எ)பொக்கையன்(23), முகமதுபுரா மோகன்ராஜ் (எ) பப்லு(23) ஆகியோர் தீபன்ராஜிடம் பணத்தை பறித்தது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள கூட்டாளிகளான லோகேஷ், கிரி, தருவன், கார்த்தி, விஷ்ணு, பிரபு, துரைசாமி (எ)கொன்னையன், ஒயிட் விஜய் ஆகிய 8பேரை தேடி வருகின்றனர்.