பெரம்பலூர்,நவ.16: வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா, தேசிய நூலக வார விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுக்கா, வாலிகண்டபுரம், அரசு மேல்நிலைப் பள்ளியில் \”மகிழ் முற்றம்\” மாணவர் குழு உருவாக்க விழா, குழந்தைகள் தின விழா, தேசிய நூலக வார விழா ஆகிய முப்பெரும் விழா பள்ளி வளாகத்தில் நடை பெற்றது. விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வராசு தலைமையேற்று நடத்தினார்.
விழாவில் மகிழ் முற்றம் மாணவர் குழுக்க ளாக குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற 5அணிகளாக உரு வாக்கப்பட்டது. இந்தக் குழுவில் குழுத் தலைவர், ஆசிரியர்களும், மாணவர் களும் நியமிக்கப்பட்டனர். தேசிய நூலக வார விழாவை கொண்டாடும் விதமாக இந்திய நூலகங் களின் தந்தை எஸ். ஆர். ரெங்கநாதனின் திருவுருவ ப்படம் திறக்கப்பட்டது. பள்ளி குழந்தைகளின் படைப்பில் உருவான \”மூன்று பூனைகளின் நிறங்கள்\” நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியி டப்பட்டது.
வாலிகண்டபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் கலியம்மாள் அய்யாக் கண்ணு வாழ்த்துரை வழங்கி நூலை வெளியிட தலைமை ஆசிரியர் செல்வராசு அதனைப் பெற்றுக் கொண்டார். குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, மாணவர்களுக்கு திருக் குறள் முற்றோதல், கட்டுரை, பேச்சு, ஓவியம் போன்ற போட்டிகள் மாணவ மாணவியரால் நடத்தப்பட்டன.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. உதவி தலைமை ஆசிரியர் கள் வீரையன், அகிலாண் டேஸ்வரி, லதா உள்ளிட்ட ஆசிரியர்கள் நிகழ்ச்சிக் கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். பள்ளி நூலகத்திற்கு ஊராட்சி மன்றத் தலைவர் ஓராண்டுக்குரிய துளிர் சிறுவர் இதழ்கள் வழங்கினார். விழாவில் பள்ளி ஆசிரியர் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் தலைட்சுமி, ராஜம்மாள், மாணவ, மாணவியர் விழாவில் திரளாகக் கலந்து கொண் டனர்.