கந்தர்வகோட்டை, ஜூலை 17: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை நகரில் விடுமுறை தினங்களில் இப்பகுதி இளைஞர்கள் மகிழ்ச்சியுடன் கூட்டாக சேர்ந்து கேரம் போர்டு, செஸ் போர்டு, ஆடு புலி ஆட்டம், தாயம் விளையாடி பொழுது கழிக்கின்றனர். அன்றைய தினம் விளையாட்டில் அமர்ந்து விட்டால் உணவு, வீட்டை மறந்து விளையாட்டில் மூழ்கி விடுகிறார்கள். இளைஞர்கள் கூறும்போது, வேலை நாட்களில் காலை முதல் இரவு வரை பணி உள்ளதாகவும், அப்போது ஆளுக்கு ஒரு வேலையாக சென்று விடுகிறோம்.
வார விடுமுறை தினங்களில் நண்பர்கள் சந்திக்கும் வேளையில் மகிழ்ச்சியாக பொழுது செல்கிறது என கூறுகிறார்கள். இவர்களது பெற்றோர்கள் கூறும்போது வாரம் முழுவதும் வெளியிடங்களுக்கு வேலை சென்று விடுகின்றனர். விடுமுறை நாட்களில் தெருவில் ஒன்று சேர்ந்து இதுபோன்ற விளையாட்டுக்களில் நேரத்தை கழிப்பதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வதாக கூறுகிறார்கள்.