சிவகங்கை, செப். 6: சிவகங்கையில் வாரம்தோறும் புதன்கிழமை சந்தை நடைபெறுவது வழக்கம். இங்கு சிவகங்கை நகர் மக்கள் மட்டுமின்றி சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் வந்து காய்கறி, மளிகை பொருள்கள், இறைச்சி, மீன், நண்டு உள்ளிட்டவைகளை வாங்கி செல்வது வழக்கம். கடந்த சில நாட்களாக இங்கு விற்கப்படும் மீன், நண்டுகள் அழுகிய நிலையில் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு புகார் வந்தது. இதையடுத்து கலெக்டர் ஆஷா அஜித் உத்தரவின் உணவு பாதுகாப்பு துறையினர் மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகள் வாரச்சந்தையில் உள்ள மீன் கடைகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். ஒன்றிய, மாநில அரசுகளால் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா எனவும் ஆய்வு செய்தனர்.மேலும் ஆப்பிரிக்கா கெளத்தி மீன்களை வளர்க்கவோ, விற்பனை செய்யவோ கூடாது. ஒரு சில கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அழுகிய மீன்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.
வாரச்சந்தையில் அதிகாரிகள் ஆய்வு
previous post