கோவை, ஜூலை 2: கோவை கே.வி. அரசூர் துணை மின் நிலையம் செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரசூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, அரசூர், பொத்தியாம்பாளையம், குரும்பபாளையம், தென்னம்பாளையம், செங்கோடகவுண்டன் புதூர், செல்லப்பம்பாளையம், பச்சாபாளையம், வடுகபாளையம், சங்கோதி பாளையம், சமத்துவபுரம், அன்பு நகர், அன்னூர் சாலை, பொன்னாண்டம் பாளையம் மற்றும் மோளபாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.