வேதாரண்யம், செப்.8: வேதாரண்யம் சி.க.சு., அரசு மேல்நிலைப் பள்ளியில் வேதாரண்யம் ஒன்றிய அளவிலான வானவில் மன்றம் சார்பில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. அறிவியல் கண்காட்சியை பள்ளி தலைமை ஆசிரியர் அன்பழகன் துவக்கி வைத்தார். வேதாரண்யம் ஒன்றியத்தில் உள்ள ஆயக்காரன்புலம், பஞ்சநதிக்குளம், தகட்டூர், புஷ்பவனம், கோடியக்காடு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட உயர்நிலை மற்றும் நடுநிலைப்பள்ளி சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், மாணவர்கள் அறிவியல் கண்காட்சி, அறிவியல் நாடகம், அறிவியல் செயல் திட்டம், சிறுதானிய பயன்பாடு குறித்து கண்காட்சி அமைத்திருந்தனர். இதன் நடுவர்களாக அறிவியல் ஆசிரியர்கள் சிவகுமார், செந்தில்குமார், ராஜ்குமார், ரவி ஆகியோர் மாணவ, மாணவிகளின் படைப்புகளை தேர்வு செய்து மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.