குளச்சல், ஜூன் 3: குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய பொது நிதி ரூ.4.35 லட்சம் செலவில் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியம் 8ம் வார்டு வாணியக்குடி ஆரோக்கியமாதா குருசடி சாலையில் அலங்கார கற்கள் பதிக்கும் பணி தொடங்கியது. குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைத்தலைவர் எனல்ராஜ் அடிக்கல் நாட்டினார். வாணியக்குடி பங்குத்தந்தை சூசை ஆன்றனி ஜெபம் செய்தார். ஊர் தலைவர் அமல்ராஜ், ஊர் செயலாளர் ஜிம்சன், பொருளாளர் சீலன் எலியாஸ், அன்பிய நிர்வாகிகள் அனிதா, புஸ்பம்,மேரி சைனி உள்பட ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
வாணியக்குடியில் அலங்கார கற்கள் பதிக்கும் பணி
0