கமுதி, ஜூலை 21: கமுதியில் அரசு நுகர்வோர் வாணிப கழக கிட்டங்கி வாட்ச்மேன் இறந்து கிடந்தது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். கமுதி அரண்மனைமேடு பகுதியில் அரசு நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கி உள்ளது. இங்கு புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த முனியமுத்து(42) வாட்ச்மேனாக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 9 மாதங்களாக தான் இங்கு பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், நேற்று காலை முனியமுத்து காவலாளி அறையில் இறந்து கிடந்துள்ளார். உடலில் காயங்கள் ஏதும் இல்லை. இவர் உடல்நல பிரச்னையால் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் இவரது இறப்பிற்கான காரணம் குறித்து கமுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.