வாடிப்பட்டி, ஆக. 5: வாடிப்பட்டி அருகே, வாலிபரிடம் செல்போன் பறித்தவரை போலீசார் கைது செய்தனர். வாடிப்பட்டி நீரேத்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன்(22). இவர் நீதிமன்றம் எதிரில் உள்ள தங்கும் விடுதியில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று அவர் வீட்டில் சாப்பிட்டு விட்டு வேலைக்கு டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வாடிப்பட்டி கருவூலம் அருகே அதே ரோட்டில் மற்றொரு டூவீலரில் வந்த 25 வயது மர்ம நபர் ஒருவர் ஹரிகிருஷ்ணனை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த செல்போனை பறித்துச்சென்றார்.
இதுகுறித்து ஹரிகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாமகேஷ், எஸ்.ஐ கணேஷ் குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது செல்போன் பறித்தவர் மதுரை பாசிங்காபுரத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.