வாடிப்பட்டி, ஆக. 7: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளான ஆண்டிபட்டி, வடுகபட்டி, தனிச்சியம், அய்யங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக கடுமையான வெயில் கொளுத்தி வந்தது. மாலை நேரங்களில் கரு மேகங்கள் சூழ்ந்தாலும் மழை பெய்திடாமல் போக்கு காட்டி விட்டு மேகங்கள் கலைந்து சென்றது.
இந்நிலையில் நேற்று பிற்பகல் வரை கடுமையான வெயில் கொளுத்தி வந்த நிலையில் மாலை சுமார் 3.30 மணியளவில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து, பலத்த சூறைக்காற்றுடன் கனமழை கொட்டியது. சுமார் 45 நிமிடங்கள் நீடித்த கனமழையால் இப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். இருப்பினும் பலத்த சூறை காற்றுக்கு பல்வேறு பகுதிகளில் மரங்கள் சாய்ந்தன. அதேபோன்று பல்வேறு பகுதிகளில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது.