சிவகிரி, ஜூன் 18: வாசுதேவநல்லூர் பகுதியில் மது விற்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 90 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்யப்பட்டது. வாசுதேவநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார் வாசுதேவநல்லூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அருளாச்சி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த கருப்பன் மகன் சுப்புராஜ்(45) வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது. இதையடுத்து அவரது வீட்டில் இருந்த 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் சுப்புராஜை கைது செய்து சிவகிரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். இதேபோல் மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்த வாசுதேவநல்லூர் இருளப்பசாமி கோயில் தெருவைச் சேர்ந்த ஐயாகுட்டி மகன் ராஜ்குமார், அருளாச்சி பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்த ராமர் மகன் செல்வகுமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 60 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வாசுதேவநல்லூர் பகுதியில் மது விற்ற 3 பேர் கைது
0
previous post