சிவகிரி,டிச.8: வாசுதேவநல்லூர் கிளை நூலகத்தில் மாவட்ட நூலக அலுவலர் ஆய்வு மேற்கொண்டு, நூறாவது புரவலராக தன்னை இணைத்துக்கொண்டார். தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் கிளை நூலகத்தில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட நூலக அலுவலர் சண்முகசுந்தரம், கிளை நூலகர் அமுதாவிடம் ரூ1000வழங்கி 100-வது புரவலராக இணைந்து கொண்டார். நூலகத்தின் வாசகர் வட்ட தலைவர் ராமர், செயலாளர் மாடசாமி, பொருளாளர் பிள்ளையார்சாமி, துணைச்செயலாளர் சுரேஷ்,கௌரவ ஆலோசகர் கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வாசுதேவநல்லூர் நூலகத்தில் நூலக அலுவலர் ஆய்வு
0