கரூர், மே 27: வாங்கல் அருகே மாயமான வாலிபரை சகோதரி அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர். கரூர் மாவட்டம் வாங்கல் அடுத்துள்ள மண்மங்கலம் பகுதியை சேர்ந்தவர் காமாட்சி (38). இவர், வாங்கல் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: தனது சகோதரரான சோமு கடந்த 15ம் தேதி கரூர் சென்று விட்டு வருவதாக கூறி வீட்டை விட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் வீடு உள்பட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. எனவே தேடி கண்டுபிடித்து தர வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார். புகாரின் அடிப்படையல் வாஙகல் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.