காஞ்சிபுரம், மே 26: வரும் 30ம் தேதி வாக்கு எண்ணுமிட முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் அடங்கிய ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் (தனி) நாடாளுமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணுவதை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணுமிட முகவர்கள் ஆலோசனை கூட்டம் குரோம்பேட்டை ஜிஎஸ்டி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஆனந்தா திருமண மண்டபத்தில் வரும் 30ம்தேதி மாலை 4 மணியளவில் நடைபெறவுள்ளது.
கூட்டத்திற்கு, திமுக பொருளாளர், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் டி.ஆர்.பாலு, காஞ்சிபுரம் (தனி) நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் க.செல்வம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.இக்கூட்டத்தில், மாவட்ட திமுக நிர்வாகிகள், சட்டமன்ற இந்நாள், முன்னாள் உறுப்பினர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் மற்றும் வாக்கு எண்ணுமிட முகவர்கள் உள்ளிட்ட அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று, தவறாமல் கூட்டத்தில் கலந்துக்கொண்டு சிறப்பிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.