சிவகங்கை, ஆக.23:தமிழகம் முழுவதும் ஏப்.19ல் மக்களவை தேர்தல் நடந்தது. சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை(தனி), சிவகங்கை ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளில் ஆயிரத்து 357 வாக்குச்சாவடிகளில் சுமார் 3ஆயிரத்து 500வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஆயிரத்து 936கட்டுப்பாட்டு கருவிகள், 2ஆயிரத்து 88வாக்குப்பதிவு விவரம் சரிபார்க்கும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த இயந்திரங்கள் மற்றும் மாவட்டத்தில் பல்வேறு தேர்தலில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் சிவகங்கை, காஞ்சிரங்கால் பகுதியில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கடந்த மக்களவை தேர்தலின் போது பழுதடைந்த 2வாக்குப்பதிவு இயந்திரங்கள், 4கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 10விவரம் சரிபார்க்கும் இயந்திரங்கள் மற்றும் உள்ளாட்சி தேர்தலின்போது பயன்படுத்தப்பட்ட 2008- 2009ம் ஆண்டை சேர்ந்த காலாவதியான 305வாக்குப்பதிவு இயந்திரங்கள், 555கட்டுப்பாட்டு இயந்திரங்கள் உள்ளிட்ட அனைத்தும் பெங்களுர் பெல் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டன. வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணிக்கு கலெக்டர் ஆஷாஅஜித் தலைமை வகித்தார். தேர்தல் தாசில்தார் மேசியாதாஸ், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.