ராமநாதபுரம் எம்பி தொகுதியில் பாஜ கூட்டணியில் சுயேச்சையாக போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம் 2ம் இடம் பிடித்தார். இதற்காக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க நேற்று ஓபிஎஸ் ராமேஸ்வரம் வந்தார். ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு நான்கு ரதவீதியில் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார். அருகில், எம்பி தர்மர், முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன், முன்னாள் எம்எல்ஏ முருகன், பாஜ மாவட்ட தலைவர் தரணி முருகேசன்.