தர்மபுரி, ஏப்.20: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் பெரும்பாலை கிராமத்தை சேர்ந்தவர் தங்கமணி. இவரது மகன் தினேஷ்(25). ஆந்திர மாநிலம், தடா பகுதியில் உள்ள தனியார் ஏர்கூலர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பு திருமணமாகி தமிழழகி என்ற மனைவி உள்ளார். தேர்தலையொட்டி சொந்த ஊரில் வாக்களிப்பதற்காக நேற்று முன்தினம் இரவு தினேஷ் தனது பைக்கில் வேலூர் வழியாக தர்மபுரிக்கு சென்று கொண்டிருந்தார். தொடர்ந்து, நேற்று அதிகாலை பள்ளிகொண்டா அடுத்த கூத்தம்பாக்கம் தேசிய நெடுஞ்சாலை உள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பைக் நிலை தடுமாறியது. பின்னர், கண்ணிமைக்கும் நேரத்தில் முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த தினேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
வாக்களிக்க சென்ற புதுமாப்பிள்ளை பலி
45
previous post