தூத்துக்குடி, செப். 6: விக்டரி தொழில் முனைவோர் பயிற்சி மையம் சார்பில், வாகைக்குளம் ராஜலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ராஜதுரை தலைமை வகித்து முகாமினை தொடங்கி வைத்தார். பயிற்சி மைய இயக்குநர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக தூத்துக்குடி பீச் ரோடு கிளை யூனியன் பேங்க் ஆப் இந்தியா உதவி மேலாளர் சதீஷ்குமார், ஆடிட்டர் மோகன ஹரீஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். கல்லூரியில் முகாமில் இறுதியாண்டு படிக்கும் மாணவ- மாணவியர் 110 பேர் கலந்து கொண்டனர்.