தூத்துக்குடி, செப்.2: மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக வாகைகுளம் துணை மின்நிலைய பகுதிகளில் இன்று (2ம் தேதி) மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் (ஊரகம்) சின்னத்துரை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டம் வாகைகுளம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று (2ம் தேதி) திங்கட்கிழமை நடக்கிறது.
இதன் காரணமாக சேர்வைகாரன்மடம், சக்கம்மாள்புரம், சிவஞானபுரம், முடிவைத்தானேந்தல், இராமச்சந்திராபுரம், ஏர்போர்ட், செல்வம்சிட்டி, பவானிநகர், கூட்டாம்புளி, குலையன்கரிசல், போடம்மாள்புரம், சிறுபாடு, திரவியபுரம், புதுக்கோட்டை அம்மன் கோவில்தெரு, மறவன்மடம், அந்தோனியார்புரம், பைபாஸ், டோல்கேட், கோரம்பள்ளம், வர்த்தகரெட்டிபட்டி, தெய்வசெயல்புரம், வல்லநாடு, அனந்தநம்பிகுறிச்சி, எல்லைநாயக்கன்பட்டி, பொட்டலூரணி விளக்கு, முருகன்புரம், ஈச்சந்தாஓடை, நாணல்காட்டான்குளம், சேதுராமலிங்கபுரம், கோனார்குளம் ஆகிய பகுதிகளில் இன்று (2ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.