கரூர், ஆக. 24: கரூர் தாந்தோணிமலை சாலை மில்கேட் பிரிவு அருகே வாகன நிறுத்தத்தை முறை ப்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது,கருர் சுங்ககேட் பகுதியில் இருந்து தாந்தோணிமலை கலெக்டர் அலுவலகம் வரை சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு, சாலையின் மையத்தில் தடுப்புச் சுவர் வைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இந்த சாலையில வஉசி பிரிவு அருகே அடுத்தடுத்து நடந்த இரண்டு விபத்துகளில் இரண்டு பேர் இறந்தனர். இதன் காரணமாக, சுங்ககேட் தாந்தோணிமலை சாலையில், சில பகுதிகள் அடைக்கப்பட்டன. தற்போதைய நிலையில் இந்த சாலையில் எளிதான போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தாந்தோணிமலை வடக்குத் தெரு பகுதியில் இருந்து தனியார் மருத்துவமனை வழியாக மில்கேட் சாலை பிரிவு அருகே அவ்வப்போது வர்த்தக நிறுவனங்கள் நீண்ட நேரம் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதனால், தாந்தோணிமலையில் இருந்து கரூர் நோக்கி வரும் வாகனங்கள் எளிதாக வளைந்து செல்ல முடியாத நிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக விபத்துக்கள் நடைபெற அதிகளவு வாய்ப்புகள் உள்ளது எனவும் கூறப்படுகிறது. எனவே, மில்கேட் பகுதி பிரிவு பகுதியில் வாகன நிறுத்தத்தை கண்காணித்து அதனை முறைப்படுத்த தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.