கோவை, மே 31: கோவை மாநகரில் குற்றச்சம்பவங்களை தடுக்கவும், விதிமுறை மீறி வாகனங்களை இயக்குபவர்களுக்கு அபராதம் விதிக்கவும் போக்குவரத்து போலீசார், சட்டம்- ஒழுங்கு போலீசார் அடிக்கடி தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு சோதனை மேற்கொள்ளும் போது போலீசார் வாகன ஓட்டிகளிடம் வாகனங்களின் ஆவணங்களை காண்பிக்க கூறுகின்றனர்.
அப்போது சிலர் டிஜிட்டல் ஆவணங்களை காண்பிக்கும் போது போலீசார் ஆவணங்களின் ஒரிஜனல் அல்லது ஜெராக்ஸ் காட்ட அறிவுறுத்தி வருகின்றனர். இதனால் சில நேரங்களில் போலீசாருக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இதனால் வாகன சோதனையில் டிஜிட்டல் ஆவணங்கள் போதுமானது என போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.