Sunday, February 25, 2024
Home » வாகனம் மோதி வாலிபர் பலி

வாகனம் மோதி வாலிபர் பலி

by Karthik Yash

விழுப்புரம், ஜன. 18: அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலியானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் அருகே உள்ள புதுப்பாளையத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ்(28). இவர் நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். சிறுவந்தாடு அருகில் சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து அவரது உறவினர் அளித்த புகாரின்பேரில் வளவனூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

seven + 13 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi