வேடசந்தூர், ஜூலை 2: வேடசந்தூர் அருகே மினுக்கம்பட்டியை சேர்ந்தவர் செல்லம்மாள் (90). இவர் நேற்று முன்தினம் இரவு அய்யர் மடம் பகுதியில் நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் செல்லம்மாள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் ஜிஹெச்சிற்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் ஜிஹெச்சிற்கு கொண்டு செல்லும் வழியில் செல்லம்மாள் உயிரிழந்தார். இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.