உளுந்தூர்பேட்டை, மே 26: உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது காம்பட்டு கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் பொன்னன் மகன் ஜெயராமன் (75). இவர் அடிக்கடி வீட்டில் கோபித்து கொண்டு எ.குமாரமங்கலம் கிராமத்தில் உள்ள அய்யனார் கோயிலுக்கு சென்று தங்கி விடுவது வழக்கமாக கொண்டிருந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன் வீட்டில் இருந்து எ.குமாரமங்கலம் அய்யனார் கோயிலுக்கு சென்றவர்,
இதே பகுதியில் உள்ள அரசு மாதிரி பள்ளி எதிரில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.