திட்டக்குடி, ஆக. 21: கடலூர் மாவட்டம் ராமநத்தத்தை அடுத்துள்ள வள்ளி மதுரம் குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள்(61). இவர் சம்பவத்தன்று ராமநத்தத்தை அடுத்துள்ள வெங்கனூர் கிராமத்தில் உள்ள பச்சையம்மன் கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு இரவு அங்கேயே தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை பெருமாள் கோயிலில் இருந்து புறப்பட்டு சொந்த ஊருக்கு செல்வதற்காக சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த ராமநத்தம் போலீசார் சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.