தர்மபுரி, ஏப்.26: தர்மபுரி நியூ காலனி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ், பெயிண்டரான இவர், நேற்று முன்தினம் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு, வீட்டில் இருந்து புறப்பட்டார். ஆனால், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சிக்குள்ளான குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது, கிருஷ்ணகிரி -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் லாரி பார்க்கிங் பகுதியில், சுரேஷ் சாலையை கடக்க முயன்றபோது, அவ்வழியாக சென்ற வாகனம் மோதியதில் படுகாயமடைந்ததும், அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்ததும் தெரியவந்தது. இதையடுத்து, குடும்பத்தினர் மருத்துவமனைக்கு விரைந்தனர். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி சுரேஷ் உயிரிழந்ததை கண்டு கதறி துடித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிந்து, சுரேஷ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாகனம் மோதி பெயிண்டர் பலி
36