தேன்கனிக்கோட்டை, நவ.15: தேன்கனிக்கோட்டை அருகே அகலக்கோட்டை கிராமத்தில் வசித்தவர் நந்திஸ் (35), டிரைவர். இவர் நேற்று முன்தினம் டூவீலரில் எம்.ஆர்.தொட்டிக்கு சென்று விட்டு மீண்டும் ஊர் திரும்பி கொண்டிருந்தார். அப்போது சென்னப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, அவ்வழியாக வந்த வாகனம் டூவீலர் மீது மோதியது. இந்த விபத்தில் நந்திஸ் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.