கோவை, ஆக. 18: கோவை செல்வபுரம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடு போனது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சந்தேகப்படும் படியாக வாகனத்தில் வந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் பைக் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் வாகனம் திருடிய ஆண்டி பாளையத்தை சேர்ந்த சஞ்சீவன் (32), சஞ்சய் (28) ஆகிய இருவரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.