கருங்கல், பிப்.26: கருங்கல் அருகே வழுதலம்பள்ளத்தில் அமைந்துள்ள நாஞ்சில் கத்தோலிக்கப் பள்ளியில் குழந்தைகளை கொண்டாடும் வண்ணம் பேபி ஷோ நடைபெற்றது. குழந்தைகள் அவர்களின் தனித்துவமான திறமையையும், ஆற்றலையும் வெளிப்படுத்தும் வகையில் இவ்விழா அமைந்திருந்தது. ஆரோக்கியமான குழந்தை, நட்பு பாராட்டும் குழந்தை, சுறுசுறுப்பான குழந்தை. நேர்த்தியான ஆடை அலங்காரம், தன்னம்பிக்கையான குழந்தை என்பதன் அடிப்படையில் குழந்தைகளுக்கு போட்டிகள் நடைபெற்றன. அதை சிறப்பான முறையில் அருட்பணி. ஜாக்சன் வழிநடத்தினார். குழந்தைகளும், பெற்றோர்களும் இணைந்து அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் கலந்து கொண்டு பரிசுகளைப் பெற்றனர். அதிர்ஷ்டசாலிகள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகளை தட்டிச் சென்றனர். இவ்விழாவானது தாளாளர் அருட்பணி. சாஜின் ரூபஸ், நிதி பரிபாலகர் அருட்பணி. ஜியோ, முதல்வர் றசல்ராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
வழுதலம்பள்ளம் நாஞ்சில் கத்தோலிக்க பள்ளியில் பேபி ஷோ
0
previous post