தொண்டாமுத்தூர், ஜூலை 9: பேரூர் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றபோது சந்தேகமளிக்கும் வகையில் சுற்றித்திரிந்த 4 பேரை பிடித்து காவல்நிலையம் அழைத்து வந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் திருப்பூர் கோல்டன் நகரை சேர்ந்த சந்தோஷ் என்பவரது மகன், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள பனையம்பள்ளி வாஞ்சிநாதன் (20), புஞ்சைபுளியம்பட்டியை சேர்ந்த விஜயராஜன்( 19), பவானிசாகர் அண்ணாநகரை சேர்ந்த ஸ்ரீகாந்த் (20) என்பதும் தெரிய வந்தது. இவர்கள் 4 பேரும் வழிப்பறி வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.