சிவகாசி: சிவகாசி அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். சிவகாசி அருகே திருத்தங்கல் பாண்டியன்நகரை சேர்ந்தவர் வினித்தன்(29). இவர் தனது நண்பர் செல்வக்குமார்(24) என்பவருடன் திருத்தங்கல் கடம்பன்குளம் கண்மாய் அருகில் இருந்தார். அப்போது அங்கு வந்த பள்ளப்பட்டி முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்த சித்திரைவேல்(37), தினேஷ்குமார்(20), துரைராஜ்(20) ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர்.
அப்போது பணம் தர மறுத்த 2 பேரையும் கத்தியால் வெட்டி உள்ளனர். இதில் காயம் அடைந்த 2 பேரிடம் இருந்து ரூ.3 ஆயிரத்து 850ஐ பறித்துக்கொண்டு தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து சித்திரைவேல்(37), தினேஷ்குமார்(20), துரைராஜ்(20) ஆகியோரை கைது செய்தனர்.