திருவில்லிபுத்தூர், அக்.25: திருவில்லிபுத்தூரில் வழக்கறிஞர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். திருவில்லிபுத்தூர் மதுரை சாலையை சேர்ந்தவர் வீரபத்திரன் மகன் விக்னேஷ் ரகுராம்(29). இவர் ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது வீட்டில் திருமணத்திற்காக பெண் பார்த்து வந்துள்ளனர். இதில் விக்னேஷ் ரகுராமிற்கு விருப்பம் இல்லை என தெரிகிறது.
இந்நிலையில் கடந்த 22ம் தேதி திருவில்லிபுத்தூர் அருகே அழகாபுரி முனியாண்டி கோயில் அருகே உள்ள முள்காட்டில் வைத்து தந்தை வீரபுத்திரன் மற்றும் உறவினர்களுக்கு போன் செய்து, மன்னித்து விடுங்கள் என கூறி லொகேஷன் ஷேர் செய்துள்ளார். பின்னர் அவரது செல்போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளார். உடனே அவரது தந்தை மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்தில் சென்று பார்த்த போது விக்னேஷ் ரகுராம் உடல் முழுவதும் தீயினால் எரிந்த நிலையில் இறந்துள்ளார். இது தொடர்பாக நத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.