கோவை, ஜூன் 16: ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வழக்கறிஞ்ரகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சக்கரவர்த்தி என்பவர், துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்தும், வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்றக்கோரியும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக் குழு இன்று (ஜூன் 16) ஒரு நாள் நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட முடிவு செய்தது.
இதன்படி கூட்டுக் குழுவின் வேண்டுகோளை ஏற்று, கோவையில் உள்ள வழக்கறிஞர்கள் இன்று ஒருநாள் நீதிமன்ற பணிகளை புறக்கணிக்க உள்ளதாக கோவை வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கூறி உள்ளனர். வழக்கறிஞர்கள் மீது நடந்து வரும் தாக்குதல்களை தடுக்கும் வகையில் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.