திருப்பூர், ஏப்.19: தமிழக வழக்கறிஞர்களின் பாதுகாப்பு சட்டத்தை உறுதி செய்ய தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிட வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நேற்று திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 9 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரத போராட்டத்திற்கு திருப்பூர் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் மாவட்ட தலைவர் சுமன் (எ) சுந்தரேஷ்வரன் தலைமை வகித்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பார்வேந்தன், சி.பி.ஐ மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், துணை மேயர் பாலசுப்பிரமணியம், திருப்பூர் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் காலநிதி, பொருளாளர் சபரீகீதன் உள்ளிட்ட பலர் கோரிகைகளை விளக்கி பேசினர். தொடர்ந்து திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் சுப்பராயனிடம் கோரிக்கை கடிதம் அளிக்கப்பட்டது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.