வள்ளியூர், ஆக.20: வள்ளியூர் நீதிமன்ற வளாகத்தில் பேட்டரி திருடியதாக வக்கீலை, அவரது நண்பருடன் சேர்ந்து போலீசார் கைதுசெய்தனர். நெல்லை மாவட்டம், வள்ளியூர் கோட்டையடி பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (60). வக்கீலான இவர் நாங்குநேரி நீதிமன்றத்தில் வக்கீல் தொழில் செய்து வருகிறார். ஏர்வாடியைச் சேர்ந்த ஆதிநாராயணன் (35) என்பவர் இவரது நண்பர். இதனிடையே வள்ளியூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இருந்த பேட்டரி ஒன்று திருடு போனது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த வள்ளியூர் போலீசார், நீதிமன்ற வளாகத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது வக்கீல் முருகனும், அவரது நண்பரான ஆதிநாராயணனும் சேர்ந்து பேட்டரியை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
வள்ளியூர் கோர்ட்டில் பேட்டரி திருடிய வக்கீல் கூட்டாளியுடன் கைது
previous post