கந்தர்வகோட்டை, ஆக.4: கந்தர்வக்கோட்டை அருகே வளவம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நலன்கருதி நிழற்குடை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள வளவம்பட்டி கிராமதை சேர்ந்த மாணவ. மாணவிகள் தினசரி புதுக்கோட்டைக்கு பள்ளி, கல்லூரி செல்லவும், பெரியவர்கள் தினசரி வேலைக்கும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நீதிமன்றம், கோட்டச்சியர் அலுவலம், மருந்துவ கல்லூரி மருத்துவமனைக்கும், வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கவும் நூற்றுக்கணக்கான மக்கள் பேருந்தில் புதுக்கோட்டை நகர்க்கு சென்று வருகிறார்கள். பேருந்துக்கு செல்ல பேருந்து நிறுத்தத்தில் நிழல் குடை இல்லாததால் அனைவரும் வெயில், மழையில் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தபட்ட துறையினர் கந்தர்வகோட்டை-புதுக்கோட்டை மார்க்கத்தில் வளவம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் மக்கள் பயன்பெறும் வகையில் பேருந்து நிழல்குடை அமைந்து தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார்கள்.
வளவம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
previous post