திருச்செங்கோடு, ஆக.31: திருச்செங்கோடு ஒன்றியம், பிரிதி ஊராட்சி பன்னீர்குத்திபாளையம் – ஏணியாங்காடு செல்லும் வழியில், ஒன்றிய பொது நிதியின் கீழ் ₹10.36 லட்சம் மதிப்பீட்டில் சிறுபாலம் அமைத்தல் மற்றும் ₹5 லட்சம் மதிப்பீட்டில் இளையாம்பாளையம், முனியப்பம்பாளையத்தில் பைப்லைன் விரிவாக்கம் செய்து தனிநபர் குடிநீர் இணைப்பு வழங்குதல் உள்ளிட்ட வளர்ச்சி திட்டப்பணிகளுக்கான தொடக்க விழா நேற்று நடந்தது. இதில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் கலந்து கொண்டு, பணிகளை தொடங்கி வைத்தார். மேலும், பணிகளை தரமான முறையில் செய்து, குறிப்பிட்ட காலத்திற்குள் ெபாதுமக்களின் பயன்பாட்டுக்கு விட வேண்டும் என ஒப்பந்ததாரரிடம் அவர் அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில், ஒன்றிய திமுக செயலாளர் வட்டூர் தங்கவேல், யூனியன் சேர்மன் சுஜாதா தங்கவேல், ஒன்றிய குழு உறுப்பினர் ப்ரியா சுரேஷ், ஊராட்சி மன்ற தலைவர் பாக்கியம், துணை தலைவர் மாணிக்கம், மோகனவேல் உள்ளிட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
வளர்ச்சி பணிகள் தொடக்க விழா
previous post