விருதுநகர், செப்.1: அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் பெரியவள்ளிக்குளம் அரசு தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்ட செயல்பாடுகளை கலெக்டர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்தார்.பின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக பெறப்பட்ட விண்ணப்பங்களை கள ஆய்வு அலுவலர்கள் விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று சரிபார்க்கும் பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் பெரியவள்ளிக்குளம் கிராமத்தில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டப்பணிகளை ஆய்வு செய்தார். ஆய்வின் போது வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் பேச்சியம்மாள், நேர்முக உதவியாளர்(விவசாயம்) நாச்சியார் அம்மாள், கோட்டாட்சியர் சிவக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.