காரிமங்கலம், ஆக.13: காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் மல்லிகுட்டை, பூமாண்டஅள்ளி, காளப்பனஅள்ளி ஆகிய ஊராட்சிகளில், ஒன்றிய, மாநில அரசு சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகிறது. குறிப்பாக குடிநீர் பணி, சாலை பணி, தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டம், பள்ளி கட்டிட மேம்பாட்டு பணிகள், கலைஞர் கனவு இல்ல திட்டப்பணிகள் உட்பட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை, சப் கலெக்டர் கௌரவ்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை தரமாகவும், விரைந்து முடிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது, பிடிஓ.,க்கள் கணேசன், நீலமேகம், இன்ஜினியர் முருகன், ஊராட்சி தலைவர்கள் பச்சையம்மாள் சிவராஜ், கவிதா நாகராஜன், நந்தினிபிரியா, செந்தில்குமார், செயலாளர்கள் தனபால், குணசேகரன், வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.