ஜெயங்கொண்டம்,செப்.3: ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, இடையக்குறிச்சி, கு.வல்லம், ஜெ.மேலூர் ஆகிய ஊராட்சிகளில், ஆண்டிமடம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா, தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம், நடைபெற்றது. ஆண்டிமடம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் கலியபெருமாள் தலைமை வகித்தார். தலைமை கழக பேச்சாளர் சேலம் சுஜாதா பேசினார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், தேவனூர் ஊராட்சி மன்ற தலைவர் விசாலாட்சி சிவக்குமார், ஒன்றிய துணை செயலாளர்கள் செந்தில், கென்னடி, அன்பழகி முத்துக்குமார், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் தருமதுரை, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பானுமதி வீரனார், மாவட்ட மகளிர் தொண்டர் அணி தலைவர் ராணி, மாவட்ட பிரதிநிதிகள் தனசேகரன், சிவமுத்து, மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சேகர், மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் பால் அருள்தாஸ், மாவட்ட தொழிற்சங்க துணை அமைப்பாளர் இளவரசு, வழக்கறிஞர் அணி செல்லமணிமாறன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் தமிழழகி, மாவட்ட அமைப்புசாரா தொழிலாளரணி, துணை தலைவர் பழ.புனிதம், ஒன்றிய குழு உறுப்பினர்கள் பூங்கோதை தனராஜ், சரோஜா காமராஜ், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர்கள் விஜயகாந்த், ராஜேஷ், கமலாதேவி, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் செல்வகுமார், விவசாய தொழிலாளர் அணி முன்னாள் துணை அமைப்பாளர் அறிவழகன், கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
வல்லம், இடையக்குறிச்சி மேலூரில்கலைஞர் நூற்றாண்டு விழா தெருமுனை பிரச்சார கூட்டம்
81